நேர்கோட்டின் வளைவுகள்அபுல் கலாம் ஆசாத்தின் சங்ககால புகாரின் சமகாலங்கள்

2021-09-25T22:02:48+05:30

ஒரு கைதேர்ந்த சிற்பி, சிற்பத்தின் எல்லா பாகங்களையும் வடித்த பின்பு, ஒரு மௌன நிலையில் அதன் கண்களை திறப்பார். அப்பொழுது, அந்த சிற்பம் உயிர் பெரும். அபுலுக்கும், புகைப்படம் எடுக்கப்பட்டவருக்குமிடையே நடக்கும் உரையாடல் தான் அவரது புகைப்படங்களின் உயிரோட்டம். இவை, உலக நாடுகளோடு கலாச்சார வாழ்வியல், வர்த்தக பரிமாற்றங்களில் சிறப்புப்பெற்ற சங்கக்கால புகாரின் சுவடுகளைத் தேடவில்லை. அந்த பரிமாற்றங்கள் விட்டுச்சென்றுள்ள ஒன்றுபட்ட கலாச்சாரம் மற்றும் பன்முக வாழ்வுமுறையின் குறியீடுகளை அடையாளம் காண்கிறது. சாதாரண மனிதர்களின் சரித்திரத்தை புகாரின் ஆண்கள் மூலமாக சொல்லும் காலத்தால் அழியாத இந்தப்படைப்பு, வரும் காலத்தில் புகார், உலக கலாச்சார வரைபடத்தில் இடம்பெற, ஒரு கலைஞன் விட்டுச்செல்லும் விதைகள்.

தென்னிந்தியாவைப் படம் பிடித்த முதல் புகைப்படக் கலைஞர்

2021-09-25T22:18:16+05:30

காலவரிசைப் படி எல்லாவற்றையும் ஆராயும் போது, கேப்டன் லின்னேயஸ் ட்ரைப் தான் தமிழகத்தை முதன்முதலில் புகைப்படம் எடுத்துள்ளார் என்று அறிய முடிகிறது. இந்தியாவிலேயே புகைப்பட ஸ்டுடியோவும், தொழிற்கலைப் பள்ளியும் முதலில் சென்னையில் தான் தொடங்கப்பட்டது. மதராஸ் ராஜதானியின் தலைநகராக இருந்த சென்னையில் மே மாதம் 1850ல் தொழிற்கலைப் பள்ளி அலெக்ஸாண்டர் ஹண்டரினால் தொடங்கப்பட்டது. அப்போது புகைப்படக்கலை முக்கியப் பாடமாகவும் இருந்தது. ஹண்டர் மற்றும் எலியட் ஆகியோர் மாணவர்களுடன் சென்று, தமிழகத்தின் முக்கிய ஊர்கள் அனைத்தையும் புகைப்படங்களாக எடுத்தனர்.

துயரத்தின் பிம்பங்கள்

2021-09-25T22:18:33+05:30

போர் புகைப்படங்களின் முரண்பாடு, இதன் மூலம் அம்பலமாகிறது. அது “அனுசரணையை” ஏற்படுத்துவதற்காக பிரசரிக்கப்படுகிறது என பெரும்பான்மையோரால் கருதப்படுகிறது. அதன் மிகவும் தீவிரமான உதாரணங்கள் – மெக்கலினின் பெரும்பான்மையான புகைப்படங்களில் உள்ளது போல – அதிகப்பட்சமான அனுசரணையை ஏற்படுத்த மிகவும் துயரமான தருணத்தை காண்பிக்கும். அத்தகைய தருணங்கள், புகைப்படம் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும், சாதாரண தருணங்களிலிருந்து தொடர்பற்ற நிலையிலிருக்கும். அவை தாமாகவே தனித்து நிற்கும்.

ஹென்ரி கார்தியெ பிரெஸ்ஸோன் – ‘இந்த நூற்றாண்டின் கண்’

2021-09-25T22:19:12+05:30

பிரெஸ்ஸோன் ஒரு மகத்தானப் புகைப்படக்கலைஞர், அதேவேளையில் அவர் மகத்தான உருவப்படப் புகைப்படக்கலைஞரும் கூட, ஏனெனில் உருவப்படப் புகைப்படக் கலைஞராக இருப்பவர்கள், மகத்தான புகைப்படக்கலைஞர்களாக இருப்பதில்லை. நாற்பதாண்டுகால புகைப்படப் பயணத்தில், ‘பத்திரிக்கைப்படக்கலை’ (Photo Journalism) என்பதை முழு அர்த்தத்துடன் செயல்படுத்திக் காட்டியவர் பிரெஸ்ஸோன். இன்னும் சொல்லப்போனால் அப்பதத்தினை புனர்மாற்றம் செய்து புதுமையாகக் கண்டுபிடித்தவர் என்றே சொல்லலாம்.

ஜான் ஐசக் – மரணித்துப் போன வண்ணங்கள், பிறகொரு வண்ணத்துப்பூச்சி

2021-09-25T22:19:35+05:30

புகைப்படக்கலைஞர் ஜான் ஐசக் பொறுத்த வரையில் புகைப் படங்களைவிட மனித மாண்பே முக்கியம். அவருடைய புகைப்பட அனுபவங்களில், ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களிடையே வேலை செய்யும்போது, ஒரு சிறு தெருவழியாக அவர் சென்று கொண்டிருக்கிறார். செல்லும் வழியில் ஒரு காட்சி, தெரு முனையில் ஓர் இளம்பெண் முழுநிர்வாணமாக, ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தபடி, அதன் தொப்புள் கொடிகூட வெட்டப்படவில்லை, ரத்த வெள்ளத்தில் குழந்தையின் அழுகுரலோடு அக்காட்சி விரிந்து கிடக்கிறது.

“கோட் சூட்டும் புகைப்படமும்” – ஜான் பெர்ஜெர்

2021-09-25T22:08:14+05:30

சூட்டுகள் அவர்களை உருக்குலைய செய்கிறது. அவர்களுக்கு ஏதோ தோற்றக்கோளாறு இருப்பது போல் தோன்றுகிறது. ஒரு பழைய ஃபேஷனாக மீண்டும் மாறும் வரை அபத்தமாகவே தோன்றும். உண்மையில் ஃபேஷனின் பொருளாதார தர்க்க சாஸ்திரம், பழைய ஃபேஷனை அபத்தமாக காண்பிப்பதில் தான் வெற்றி அடைகிறது. ஆனால், இங்கே, நாம் அது போன்ற ஓர் அபத்தத்தை காணவில்லை; மாறாக, இங்கே உடைகளை அதனை அணிந்திருக்கும் உடல்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, உடைகள் அபத்தமல்லாததாகவும் இயல்பற்றதாகவும் தோன்றுகிறது.

‘‘காத்திருத்தலே புகைப்படக்கலை’’ – சென்னையில் ரகுராய்

2021-09-25T22:09:10+05:30

ரகுராய் ‘‘காத்திருத்தலே புகைப்படக்கலை’’ என்றார். ஒவ்வொரு புகைப்படத்திலும் ஏதாவது அற்புதங்கள் நிகழவேண்டும். அந்த அற்புதங்கள் புகைப்படத்தை மேலும் செழுமையாக்குகின்றன. கடுமையான அர்ப்பணிப்பும், வெறியும், நேர்மையும் கொண்டு காத்திருக்கும் போது, இயற்கை உங்கள் மேல் கருணை கொண்டு சில சம்பவங்களை காட்சிப் படிமத்தில் நிகழ்த்தும். தான் அதனை நம்பவுதாகவும் குறிப்பிட்டார்.

ஒளியே மொழி-வரலாறே மொழி

2021-09-25T22:10:12+05:30

புகைப்படக்கலையின் வரலாறு என்பது ஊசித்துளைக் கேமராவினுள்தான் தொடங்குகிறது.கேமரா அப்ஸ்க்யூரா (CAMERA OBSCURA), கேமரா லூசிடா (CAMERA LUCIDA) என்ற இருவகையான புகைப்படக் கருவிகள் – ஓவியர்கள் தங்களுடைய படிமங்களைக் கட்டமைப்பதற்காக உருவாக்கப்பட்டவை.

ஆந்த்ரே கெர்தஸ் – ‘உலகை முதலில் புதிதாகப் பார்த்தார்’

2021-09-25T22:10:45+05:30

அவருடைய படைப்புகள் எல்லாவற்றையும் உதறிக்கொண்டு எளிமையான புகைப்படங்களாகவே இருந்தன. வெறுமனே புகைப்படக்கலைஞராக மட்டுமல்லாமல், ஓர் ஓவியராக, கவிஞராக, நகைச்சுவையாளராக அவர் இருந்தார். புகைப்படக்கலையில் ஓவியத்தின் பாதிப்பை இவரின் படங்களில் உணரலாம். குறிப்பாக சிதைக்கப்பட்ட நிர்வாண உருவங்கள், அசையாப் பொருட்களின் சித்திரங்கள் இவருடைய ஓவிய ஆர்வத்தை வெளிப்படுத்தின. இரு வேறு காட்சிகளை இணைப்பதும், ஒரே புகைப்படத்தில் பல்வேறு புகைப்பட அனுபவங்கள் பின்னப்பட்டிருப்பதும் இவரிடமே தொடங்குகிறது.

வாசனையின் மெலிதான ஒலி

2021-09-25T22:11:46+05:30

தரிசனமனை என்னும் பாளையங்கோட்டை கண்தெரியாதோர் பள்ளி 100 ஆண்டு கால வரலாறு கொண்டது. அதைப் பற்றிய மனப்பதிவுகளையும், புகைப்படப்பதிவுகளையும் செய்வதற்கான உந்துதல் சம்பவத்தையும் குறிப்பிட விரும்புகிறேன். கல்லூரி முடிந்து பாளை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது மழை தன் தோகையை விரித்து மெதுவாக ஆடிக்கொண்டிருந்தது. என்னைப் போலவே ஆடுகளுக்கும் அப்போது மழையில் நனைய விருப்பமில்லை. எனதருகில் கண்தெரியாத மாணவர்கள் ஐந்தாறுபேர் கைகளைப் பின்னிப் பிணைத்தபடி ஒரே உடலாய் நின்றிருந்தனர். பள்ளியின் விடுமுறை துவங்குகிறது. நீண்ட பிரிவினை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனவே உடல்கள் பிரியமறுத்து

கோமாளிக்கு ஓர் அவசரக் கடிதம்…

2021-09-25T22:12:12+05:30

வசீகரக் கோமாளிகளே, நீண்ட காலமாய் உங்களில் ஒருவனாக ஆகிவிடவேண்டுமென்ற எனது கனவு மெல்ல மறைந்து போகும் அபாயம் எனக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உங்கள் மேல் உள்ள காதல் துளிகளை உங்களிடம் நான் சொல்ல வரும்போதெல்லாம், ஒன்று நீங்கள் குட்டையாயிருக்கிறீர்கள் அல்லது மிக உயரமாயிருக்கிறீர்கள். நீங்கள் அண்ணாந்து பார்ப்பதையும் குனிந்து பார்ப்பதையும் நானும் விரும்பவில்லை.

“பகலும் பனியும்” – மேகாலயாவின் கல் மனிதர்கள்…

2021-09-25T22:12:47+05:30

மேகாலயா இயற்கையின் சுரங்கம்… எனவே எண்ணற்ற கனிமங்களை அரசும் பன்னாட்டு முதலாளிகளும் நாடெங்கும் தோண்டிக் கொண்டிருக்கின்றனர். 15 க்கும் அதிகமான அரிய கனிமங்கள் மேகாலயாவில் தோண்டி எடுக்கப் படுகிறது. தொழிலாளர்கள் வேலை செய்வது, மலைகள் தோண்டப்பட்ட கோரக்காட்சிகள், இயந்திரங்கள், பெரும் லாரிகள், கல்லுடைக்கும் தொழிலாளர்களின் குடும்பங்கள் என படிமங்கள் விரிந்து கொண்டே போகிறது.

பேசாத கல்லும், விளையாட்டுப் பொம்மையும்

2021-09-25T22:14:22+05:30

கையில் கேமராவுடன் அலையும் சூபியாக மாறிய ராவுத்தரே அபுல். அவரது முன்னோர் எவ்வாறு மக்களிடம் பேசினரோ அவ்வண்ணமே தமிழ் பேசுகிறார். ஆனால், ஆசாத் எந்தவொரு மொழியிலும் பேசவில்லை என்று தான் நான் எண்ணுகிறேன். அவர் புகைப்படங்களின் மொழியினை பேசுகிறார். உலகில் அறியப்பட்ட, மற்றும் அறியப்படாத எந்த மொழியையும் பேசும் ஆற்றல் கொண்ட புன்னகைக்கும் புகைப்படக்கலைஞனே அபுல் கலாம் ஆசாத்.

எரிமலைகளின் வெடிப்புகளை வணங்குகிறோம், ப்ராஜெக்ட் 365 திருவண்ணாமலை

2021-09-25T22:15:31+05:30

திருவண்ணாமலை புகைப்படங்களின் அடித்தளத்தை பல்வேறு புகைப்படகலைஞர்கள் ஏற்கனவே உருவாக்கியுள்ளனர், P.R.S. மணி, T.N. கிருஷ்ணசாமி, ஹென்றி கார்டியன் பிரஸ்ஸோன், எலியட் எலிசபோன், கோவிந்த் வெல்லிங், இரினோ குர்க்கி போன்றோர் உறுதியான புகைப்படப்பாதையை அமைத்துள்ளனர். உண்மையிலேயே இது நம்பமுடியாத அதிசயமான பாதைதான். ஏதோ ஒரு வகையில் புகைப்படக்கலைஞர்களுக்கான ஒளியூட்டும் விளக்காக ரமணர் இருந்திருக்கிறார். ரமணரின் வாழ்க்கையில் இம்மண்ணின் தொல்குடிச் சிந்தனைகளையும், விடுதலை உணர்வையும் தந்த நாரயண குருவும் இடம் பெற்றிருக்கிறார். இருவரின் சந்திப்பும் மிக முக்கியமானது என்று கருதுகின்றனர், இப்புகைப்படத் திட்டத்தின் கலைஞர்கள்.

நினைவுகளால் உருவாகும் கோட்டைகளும், கிரீடங்களும்

2021-09-25T22:16:32+05:30

ராஜா தீன் தயாள், காலனித்துவ மற்றும் நிலவுடைமை கொண்டிருந்த அதிகார வர்க்கத்தின் சேவகராக, தீவிரப் பரப்புரையாளராக, தந்திரமான வர்த்தகராக தன்னை பிரதிபலித்துக்கொண்டு வெளி நாட்டவர் விரும்பும் வண்ணம் புகைப்படம் எடுத்து வந்தாலும், தற்பொழுது, அவரது புகைப்படங்கள் அழிந்து மறைந்துவிட்ட ஒரு காலத்தின் கல்வெட்டாக உயர்ந்து நிற்கிறது. இவர் எடுத்த முக்கால்வாசி புகைப்படங்கள் வெளிநாட்டில் களஞ்சியங்களில் உள்ளது. அவரது ஸ்டுடியோவில் மீதம் இருந்த, பெரும்பாலும் நிராகரிக்கப்பட்ட, அல்லது வேண்டாம் என்று தானே ஆர்டர் கொடுத்தவரிடம் கொடுக்காது மாற்றி வைத்த பிளேட்டுகள் பலவற்றையும், சமீபத்தில் IGNCA வாங்கி, பாதுகாத்து வருகிறது. அன்னாரது முப்பது ஆண்டு புகைப்படப்பயணம் இன்றும் இந்தியாவின் சிறந்த ஆவணமாக எக்காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.

Go to Top