போட்டோ மெயில்
தமிழ் பக்கத்தில்
சமகால புகைப்படக்கலை
அதன் வரலாறு, அழகியல்
நுட்பங்கள், விமர்சனம், மற்றும்
மொழிமாற்றப்பட்ட
கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

Gemini Circus Tirunelveli, photographs shot by Indian Photographer RR Srinivasan
கோமாளிக்கு ஓர் அவசரக் கடிதம் © ஆர். ஆர். சீனிவாசன் 2000 | 35mm பிலிம் நெகடிவ்

கோமாளிக்கு ஓர் அவசரக் கடிதம் 

புகைப்படங்களில் எதைத் தேடுகிறீர்கள்? இருளையா?

அல்லது ஒளியையா?

ஒளியின் நிழலில் இருள் உள்ளது. அழகான இயற்கைச் சித்திரங்கள். சூரியோதயம், அஸ்தமனம், பூக்கள், விலங்குகள் இவையாவும் அற்புதங்கள். அனால் இவையாவும் சிலரின் கேமராக்களில் மட்டும் அற்புதமான படங்களாய் வருவதன் மாயமென்ன! பதில் எளிமையனது. கேமராக் கலைஞர் அற்புதமானவர் என்பதுதான். அழகுணர்ச்சி, வண்ணங்களின் ஒருங்கிணைப்பு, கோணங்களின் சிறப்புத் தன்மை இவை எல்லாவற்றையும் தாண்டி புகைப்படக்கலையின் மகத்துவம் வேறெங்கோ ஒளிந்திருக்கிறது.

குழந்தைகள் தங்களுக்கு பிடித்த உணவுப் பொருட்களை டவுசர் பையில் வைத்தபடி தூங்கி வழிகிறார்கள். இரவுகளில் எலிகள் உணவுகளை, பையின் ஒரு பகுதியையும் துளையிட்டுச் செல்கிறது. அப்பையின் துளையின் வழியே இவ்வுலகத்தை பாருங்கள். இவ்வுலகம் எவ்வளவு பிரமிப்பானதென்று. கேமராவின் துளையை விட……….

புகைப்படம் என்பது உறவுகள் அன்றி வேறொன்றுமில்லை. முதலில் கேமராவுக்கு உங்களுக்கும் மானசீகமான உறவு வேண்டும். உங்கள் உடம்பின் ஒரு பகுதியாக அது இன்றும் மாறவில்லையேனில் நீங்கள் புகைப்படக்கலையில் அரிச்சுவடிபாடத்தில் இருக்கிறீர்கள் என்று பொருள். உங்களின் தசைகளில், நரம்புகளில் கேமராவினுள் ஓடும்போது புகைப்படக்கலை சாத்தியமாகிறது. உறவுகளை படம்பிடிப்பது என்பது என்ன? வேறொன்றுமில்லை, உங்கள் கேமராவை தரையில் வைத்துவிட்டு நீங்கள் படம்பிடிக்க விரும்புவரை உணர்வதுதான். அவரும் உங்களை உணரும் வரை. உத்தேசங்களற்று நீங்கள் ஒருவரில் ஒருவர் கரைந்து விடும்போது. உங்கள் கேமரா இருவரையும் படம் பிடிக்கிறது. அதுவே ஒரு நல்ல புகைப்படம்…

சீகரக் கோமாளிகளே, நீண்ட காலமாய் உங்களில் ஒருவனாக ஆகிவிடவேண்டுமென்ற எனது கனவு மெல்ல மறைந்து போகும் அபாயம் எனக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உங்கள் மேல் உள்ள காதல் துளிகளை உங்களிடம் நான் சொல்ல வரும்போதெல்லாம், ஒன்று நீங்கள் குட்டையாயிருக்கிறீர்கள் அல்லது மிக உயரமாயிருக்கிறீர்கள். நீங்கள் அண்ணாந்து பார்ப்பதையும் குனிந்து பார்ப்பதையும் நானும் விரும்பவில்லை. என்னுடைய காதலியின் உயரத்தைக் கருதி நான் என்னுடைய உயரத்தை மாற்றிக் கொள்ளவும் விரும்பவில்லை. சர்க்கஸ் காட்சிகளின் இடையே உங்களைப் பார்க்க உங்கள் கூடாரத்துக்கு வந்தேன். அப்போது நீங்கள் அசந்து தூங்கிக் கொண்டிருந்தீர்கள். உங்களை எழுப்பி என்னுடையைக் காதலைச் சொல்லுமளவுக்கு எனக்கு தைரியமில்லை. உங்கள் கட்டிலின் அருகே மண்டியிட்டு, உங்களைத் தினசரி வந்து பார்த்ததற்காக சிறுவயதில் எனது அப்பாவிடம் பெற்ற காயங்களைக் காட்டினேன். காயங்கள் குணமாவதற்கும் நான் மீண்டும் உங்களிடம் தான் வந்தேன் என்பதையும் உங்கள் காதில் சொன்னேன். உங்கள் ஒப்பனை செய்யப்பட்ட மூக்கின் மேல் முத்தமிட்டு திருப்பி வந்தேன். என் உதடுகளில் வெண்ணிற சாயம் ஒட்டியிருந்ததை யாரும் பார்க்காத வண்ணம் துடைத்துக் கொண்டேன். உங்கள் வாழ்க்கைதான் எவ்வளவு கவித்துவ சோகம் நிறம்பியது? யாருக்கு கிடைக்கும் கூண்டில் அடைபட்டிருக்கும் மிருகங்களை மகிழ்ச்சிப்படுத்தும் வேலை? அந்தரத்தில் மீண்டும் மீண்டும் நீங்கள் நிகழ்த்தும், மரணத்தை கேலி செய்யும் சாகசங்களை யாரும் அறியாவண்ணம் நான் மட்டும் பார்ப்பதாகவே உணர்கிறேன். அதுவே உங்களின் வெற்றி. அனைத்து வித்தைகளையும் கற்றுக் கொண்டும், பயிற்றுவித்தும் தொடர்ந்து வாழ்க்கையை நகர்த்தி சக கோமாளிகளிடம் உதைகளையும், அடிகளைளையும் பெற்று உங்கள் கைதட்டல்களையும் பறித்துக் கொள்கிறீர்கள். உங்கள் வெண்ணிற முகங்களோடு, உலகை ஏமாற்றும் வித்தையும் என் கனவுகளில் வந்து துன்புறுத்துகிறது. உங்கள் கூடாரத்தையும், காலியான இருக்கைகளையும், சிங்கங்களின் எலும்பு தெரியும் கர்ஜனைகளையும் பார்க்க எனக்கு பயமாக இருக்கிறது…. எங்கே நாளை உங்களை வந்து சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்று!!! என் கண்ணீர் துளிகளின் உஷ்ணம் நீங்கள் உணர்ந்ததுதான்… இவ்வுலகத்தை உய்விக்க நான் சிபாரிசு செய்யும் ஒரே தத்துவம் நீங்கள்தான். பல நூற்றாண்டுகள் உங்கள் கூடாரங்களில் நீங்கள் தங்கியிருக்க வேண்டும். என் மகளுக்காக நான் உங்களை மட்டும் நம்பிருக்கிறேன்.

அன்புடன்,

ஆர்.ஆர். சீனிவாசன்.



Gemini Circus Tirunelveli, photographs shot by Indian Photographer RR Srinivasan
Gemini Circus Tirunelveli, photographs shot by Indian Photographer RR Srinivasan
Gemini Circus Tirunelveli, photographs shot by Indian Photographer RR Srinivasan
Gemini Circus Tirunelveli, photographs shot by Indian Photographer RR Srinivasan
Gemini Circus Tirunelveli, photographs shot by Indian Photographer RR Srinivasan
Gemini Circus Tirunelveli, photographs shot by Indian Photographer RR Srinivasan
Gemini Circus Tirunelveli, photographs shot by Indian Photographer RR Srinivasan
Gemini Circus Tirunelveli, photographs shot by Indian Photographer RR Srinivasan
கோமாளிக்கு ஓர் அவசரக் கடிதம் © ஆர். ஆர். சீனிவாசன் 2000 | 35mm பிலிம் நெகடிவ்
RR Srinivasan

ஆர். ஆர்.சீனிவாசன் தமிழகத்தின் முக்கிய ஸ்ட்ரீட் போட்டோகிராஃபர்களில் ஒருவர். ‘காஞ்சனை திரைப்பட இயக்கம்’ ஆரம்பித்து தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை திரைப்பட இயக்கத்தை வளர்க்கவே செலவழித்திருக்கிறார். இதுவரை 15 ஆவணப்படங்கள் இயக்கியிருக்கிறார். அதில், தாமிரபரணி நதியில், தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த ஆவணப்படம் கவனத்துக்குரியது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் அவரது புகைப்படங்கள் கண்காட்சி செய்யப்பட்டுள்ளது. ப்ராஜெக்ட் 365ல் திரு சீனிவாசன் ‘திருவண்ணாமலையின் தொல்லியல் புகைப்பட வரைபடம்’ என்ற தலைப்பில் பங்களித்துள்ளார்.



Published on February 20, 2017

Share

Related Articles

2021-11-18T10:15:13+05:30

கழுமரவேர் | ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும்

ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை கவிதைகள் முத்துராசா குமார் புகைப்படம் அபுல் கலாம் ஆசாத் போட்டோ மெயில் தமிழ் பக்கத்தில் சமகால புகைப்படக்கலை அதன் வரலாறு, அழகியல் நுட்பங்கள், விமர்சனம், மற்றும் மொழிமாற்றப்பட்ட கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

2021-11-12T14:28:19+05:30

முந்திரி | ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும்

ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை கவிதைகள் முத்துராசா குமார் புகைப்படம் அபுல் கலாம் ஆசாத் போட்டோ மெயில் தமிழ் பக்கத்தில் சமகால புகைப்படக்கலை அதன் வரலாறு, அழகியல் நுட்பங்கள், விமர்சனம், மற்றும் மொழிமாற்றப்பட்ட கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

2021-09-25T21:50:15+05:30

கூழாங்கல் பதித்த தாயத்து | ஒளியெழுத்து

கூழாங்கல் பதித்த தாயத்து, சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை, கவிதைகள் முத்துராசா குமார், புகைப்படம் அபுல் கலாம் ஆசாத்

2021-09-25T22:17:09+05:30

கருப்பு நிலமும், மனிதர்களும் | பாலமுருகன்

இந்திய வரைபடத்தில் புதிதாக உதயமான ஒரு மாநிலத்தில் கால் வைக்க போகிறோம் என்றதுமே அதற்கான முன்திட்டமிடல் ஆரம்பமானது. பயணம் தொடங்கியது. ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து நான்கு மணி நேர சாலைப்பயணம். ஜார்கண்ட் என்ற சொல்லுக்கு காடுகளை கொண்ட நிலப்பரப்பு என்பது பொருள். அந்த பெயருக்கு எந்த குறைவும் இல்லாமல் வழி நெடுக அடர்ந்த காடுகளை காண முடிந்தது. தூத்துக்குடி துறைமுகத்தில் நிலக்கரியை கப்பலில் இருந்து இறக்குமதி செய்வதை பார்த்த எனக்கு நிலக்கரி மலையை வெட்டி போடப்பட்டிருந்த சாலையில் பயணித்த போது சிலிர்ப்பாக இருந்தது.

2021-09-25T21:45:03+05:30

செந்தட்டி | புகைப்படமும் கவிதையும்

ஒளியெழுத்து. சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை. புகைப்படம் அபுல் கலாம் ஆசாத். கவிதைகள் முத்துராசா குமார்.

2021-09-25T21:46:30+05:30

தலைப்பற்ற கவிதை | ஒளியெழுத்து

சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை. கவிதைகள் முத்துராசா குமார். புகைப்படம் அபுல் கலாம் ஆசாத்