சமகால புகைப்படமும்
கவிதையும்
சிறப்பு நெடுவரிசை
கவிதைகள் முத்துராசா குமார்
புகைப்படம்
அபுல் கலாம் ஆசாத்

போட்டோ மெயில்
தமிழ் பக்கத்தில்
சமகால புகைப்படக்கலை
அதன் வரலாறு, அழகியல்
நுட்பங்கள், விமர்சனம், மற்றும்
மொழிமாற்றப்பட்ட
கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

Pandemic period photographs
Pandemic Dreams © Abul Kalam Azad 2020

Smart City

தன்மேல் படியும்
புழுதித்தூசிகளின்
குடலைச் சரிக்கிறது விரிகொம்பு காளை
துண்டாக்குகிறது கத்திக்கட்டு சேவல்
வாலால் விரட்டுகிறது குதிரை
உறிகிறது வாத்து
கொத்துகிறது பொச்சாட்டிக் குருவி
புழுத்துகிறது கெடா
உலுப்புகிறது மரம்
தொல்சிற்பங்களால் எதுவும்
செய்ய முடியவில்லை.
எரிபுகைக்குள்ளிருக்கும்
அரைவளவி பாலத்தில்
ட்ரை சைக்கிளேத்தும்
லோடுமேனாகிய நான்
கிழ அப்ராணியான்.
இறுகிய கால்கறியை மிருதுவாக்க
அந்தியில் XXX ரம்முடன்
தரைப்பாலத்தில் அமர்ந்து
பழ மருதயை
ஒவ்வொன்றாக ஊதித் துடைத்து
பாட்டிலிலுள்ள
Old Chefவிடம் காட்டுவேன்.



அபுல் கலாம் ஆசாத், சமகால இந்திய புகைப்படக்காரர் மற்றும் புகைப்படங்களுக்கான ஏகலோகம் புகைப்படக்கலை அறக்கட்டளையின் நிறுவனர். அபுலின் புகைப்படப் படைப்புகள் பெரும்பாலும் சுயசரிதை மற்றும் அரசியல், கலாச்சாரம், சமகால நுண்ணிய வரலாறு, பாலினம் மற்றும் சிற்றின்பம் ஆகிய பகுதிகளை ஆராய்கின்றன. அவரது படைப்புகள் சாதாரண மக்கள் இல்லாத வரலாறு மற்றும் முக்கியமாக அழகான படங்கள் மற்றும் சின்னங்களால் வழங்கப்படுகிற சமகால இந்திய வரலாற்றை மற்றொரு பரிணாமத்தில் எடுத்துரைக்க முயற்சிக்கின்றன.

Muthurasa kumar

முத்துராசா குமார், மதுரை மாவட்டம் சோழவந்தான் – தென்கரை சொந்த ஊர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை, சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் & தொடர்பியல் துறையில் M.A.Mphil பயின்றுள்ளார். ஆனந்தவிகடனில் மாணவப் பத்திரிகையாளரகப் பணிபுரிந்துள்ளார். முத்துராசா குமாரின் கட்டுரைகளில் சில ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு The Wire, The News Minute, Malayala Manorama முதலான செய்தித்தளங்களில் வெளிவந்திருக்கின்றன. ஊடகத்துறையில் வழங்கப்படும் ‘LAADLI’ விருது இவரது கட்டுரைக்காக வழங்கப்பட்டிருக்கிறது.’செதில் பய’ ‘டிஜிட்டல் மூஞ்சி’ போன்ற சுயாதீன இசை ஆல்பங்களை எழுதி இயக்கியுள்ளார். அச்சு மற்றும் இணைய இதழ்களில் கட்டுரைகளும், கவிதைகளும், சிறுகதைகளும் எழுதி வருகிறார். தற்போது சுயாதீனப் பத்திரிகையாளராகவும், திரைத்துறையிலும் இயங்கி வருகிறார்.



Published on January 26, 2021

Share

Related Articles

2021-11-18T10:15:13+05:30

கழுமரவேர் | ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும்

ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை கவிதைகள் முத்துராசா குமார் புகைப்படம் அபுல் கலாம் ஆசாத் போட்டோ மெயில் தமிழ் பக்கத்தில் சமகால புகைப்படக்கலை அதன் வரலாறு, அழகியல் நுட்பங்கள், விமர்சனம், மற்றும் மொழிமாற்றப்பட்ட கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

2021-11-12T14:28:19+05:30

முந்திரி | ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும்

ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை கவிதைகள் முத்துராசா குமார் புகைப்படம் அபுல் கலாம் ஆசாத் போட்டோ மெயில் தமிழ் பக்கத்தில் சமகால புகைப்படக்கலை அதன் வரலாறு, அழகியல் நுட்பங்கள், விமர்சனம், மற்றும் மொழிமாற்றப்பட்ட கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

2021-09-25T21:50:15+05:30

கூழாங்கல் பதித்த தாயத்து | ஒளியெழுத்து

கூழாங்கல் பதித்த தாயத்து, சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை, கவிதைகள் முத்துராசா குமார், புகைப்படம் அபுல் கலாம் ஆசாத்

2021-09-25T21:45:03+05:30

செந்தட்டி | புகைப்படமும் கவிதையும்

ஒளியெழுத்து. சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை. புகைப்படம் அபுல் கலாம் ஆசாத். கவிதைகள் முத்துராசா குமார்.