சமகால புகைப்படமும்
கவிதையும்
சிறப்பு நெடுவரிசை
கவிதைகள் முத்துராசா குமார்
புகைப்படம்
அபுல் கலாம் ஆசாத்

போட்டோ மெயில்
தமிழ் பக்கத்தில்
சமகால புகைப்படக்கலை
அதன் வரலாறு, அழகியல்
நுட்பங்கள், விமர்சனம், மற்றும்
மொழிமாற்றப்பட்ட
கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

Pandemic Dreams by Abul Kalam Azad 2020
Pandemic Dreams © Abul Kalam Azad 2020

கூழாங்கல் பதித்த தாயத்து

பொடனி வளைய
ஊரைக் குனிந்து பார்த்த
வைகையின் கூழாங்கற்கள்
கோழிச்செல்லுக்கு கீழே நின்று
சங்கு விடைக்க
ஊரை நிமிர்ந்து பார்க்கின்றன.
அறுவக்கோட்டையின்
மிச்ச உயிராய் அனத்தும்
பட்டுப்போன கூழாங்கற்களுக்கு
என்ன செய்ய.
நானொரு மரைப்புறா.
மழையிரவின்
வெள்ளை மின்னல் வெளிச்சத்தில்
அம்மை பொங்கிய கண்களோடு
கற்களைக் கொத்தி
தொண்டையிலதக்கிப் பறந்தேன்.
வேர்க்கொத்துகள் சரிந்த
கற்களுக்கு காயத்துணிக் கட்டுகிறேன்.
கற்களின் காதுமடலுக்குப் பின்னால்
கடுக்காப்பழத்தை
திருஷ்டிப் பொட்டாக்கி
கரும்புத்தொட்டிலில் ஆட்டுகிறேன்.
தன்னுள் கொறவைக் குஞ்சுகளை நீந்தவிடும் கற்கள்
எனக்கு மட்டும்
வால் தூக்கி அணிலாய் ஓடுகின்றன
நீரில் முக்குளிப்பானாகின்றன
கொட்டாச்சியால் மூடுகையில்
ஆமையாய் நகருகின்றன
சோழிப்பிளவின் கண்கள் கொண்ட குட்டிநாயென
சுருண்டுறங்குகின்றன.
எச்சமிடும் நெய்க்குருவிக்கு
மலையாகின்றன.



{தளுகை – மணல்மகுடி நாடகநிலத்திற்கு}

அபுல் கலாம் ஆசாத், சமகால இந்திய புகைப்படக்காரர் மற்றும் புகைப்படங்களுக்கான ஏகலோகம் புகைப்படக்கலை அறக்கட்டளையின் நிறுவனர். அபுலின் புகைப்படப் படைப்புகள் பெரும்பாலும் சுயசரிதை மற்றும் அரசியல், கலாச்சாரம், சமகால நுண்ணிய வரலாறு, பாலினம் மற்றும் சிற்றின்பம் ஆகிய பகுதிகளை ஆராய்கின்றன. அவரது படைப்புகள் சாதாரண மக்கள் இல்லாத வரலாறு மற்றும் முக்கியமாக அழகான படங்கள் மற்றும் சின்னங்களால் வழங்கப்படுகிற சமகால இந்திய வரலாற்றை மற்றொரு பரிணாமத்தில் எடுத்துரைக்க முயற்சிக்கின்றன.

Muthurasa kumar

முத்துராசா குமார், மதுரை மாவட்டம் சோழவந்தான் – தென்கரை சொந்த ஊர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை, சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் & தொடர்பியல் துறையில் M.A.Mphil பயின்றுள்ளார். ஆனந்தவிகடனில் மாணவப் பத்திரிகையாளரகப் பணிபுரிந்துள்ளார். முத்துராசா குமாரின் கட்டுரைகளில் சில ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு The Wire, The News Minute, Malayala Manorama முதலான செய்தித்தளங்களில் வெளிவந்திருக்கின்றன. ஊடகத்துறையில் வழங்கப்படும் ‘LAADLI’ விருது இவரது கட்டுரைக்காக வழங்கப்பட்டிருக்கிறது.’செதில் பய’ ‘டிஜிட்டல் மூஞ்சி’ போன்ற சுயாதீன இசை ஆல்பங்களை எழுதி இயக்கியுள்ளார். அச்சு மற்றும் இணைய இதழ்களில் கட்டுரைகளும், கவிதைகளும், சிறுகதைகளும் எழுதி வருகிறார். தற்போது சுயாதீனப் பத்திரிகையாளராகவும், திரைத்துறையிலும் இயங்கி வருகிறார்.



Published on August  23, 2021

Share

Home » Portfolio » Authors » Abul Kalam Azad » கூழாங்கல் பதித்த தாயத்து | ஒளியெழுத்து

Related Articles

2021-11-18T10:15:13+05:30

கழுமரவேர் | ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும்

ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை கவிதைகள் முத்துராசா குமார் புகைப்படம் அபுல் கலாம் ஆசாத் போட்டோ மெயில் தமிழ் பக்கத்தில் சமகால புகைப்படக்கலை அதன் வரலாறு, அழகியல் நுட்பங்கள், விமர்சனம், மற்றும் மொழிமாற்றப்பட்ட கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

2021-11-12T14:28:19+05:30

முந்திரி | ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும்

ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை கவிதைகள் முத்துராசா குமார் புகைப்படம் அபுல் கலாம் ஆசாத் போட்டோ மெயில் தமிழ் பக்கத்தில் சமகால புகைப்படக்கலை அதன் வரலாறு, அழகியல் நுட்பங்கள், விமர்சனம், மற்றும் மொழிமாற்றப்பட்ட கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

2021-09-25T21:50:15+05:30

கூழாங்கல் பதித்த தாயத்து | ஒளியெழுத்து

கூழாங்கல் பதித்த தாயத்து, சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை, கவிதைகள் முத்துராசா குமார், புகைப்படம் அபுல் கலாம் ஆசாத்

2021-09-25T21:45:03+05:30

செந்தட்டி | புகைப்படமும் கவிதையும்

ஒளியெழுத்து. சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை. புகைப்படம் அபுல் கலாம் ஆசாத். கவிதைகள் முத்துராசா குமார்.