Balamurugan

பாலமுருகன், சுய கற்றல் மூலமாக புகைப்படக்கலையை உள்வாங்கிக்கொண்டவர். திருமண புகைப்படக்காரராக தனது புகைப்பட பயணத்தை தொடர்ந்த அவர் சுதந்திர பத்திரிகை புகைப்படகாரராக தினசரி நாளிதழ் மற்றும் வார பத்திரிகைகளுக்கும் பணியாற்றி உள்ளார். 15 ஆண்டு காலம் தமிழ் செய்தி தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. 28 ஆண்டுகள் புகைப்படம் மற்றும் செய்தித்துறை சார்ந்து பணியாற்றிய அனுபவங்களைக் கொண்டு இளம் புகைப்பட ஆர்வலர்களுக்கு புகைப்பட பயிற்சி வகுப்புகளை புகைப்பட நிபுணர்களைக்கொண்டு நடத்தி வருகிறார். ஊடக உளவியல் துறையில் கல்லூரி பகுதி நேர விரிவுறையாளராகவும் உள்ளார். புகைப்படத்துறையில் அடுத்த கட்டத்திற்கு தன்னை நகர்த்திகொள்ள விரும்பி ஆவண புகைப்பட தொகுப்புகளை உருவாக்கி வருகிறார்.

Bala Murugan is a native of Tuticorin, with 25 years of experience in the field of photography. He has indulged in the fields of wedding photography, street photography and photojournalism. His career includes a stint as reporter at Sun TV. Balamurugan is involved in regional efforts aimed at educating and promoting young photographers.