Project Description

சமகால புகைப்படமும்
கவிதையும்
சிறப்பு நெடுவரிசை
கவிதைகள் முத்துராசா குமார்
புகைப்படம்
அபுல் கலாம் ஆசாத்

போட்டோ மெயில்
தமிழ் பக்கத்தில்
சமகால புகைப்படக்கலை
அதன் வரலாறு, அழகியல்
நுட்பங்கள், விமர்சனம், மற்றும்
மொழிமாற்றப்பட்ட
கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

புகைப்படம் ©  ஜான் பெர்ஜெர் | மூலம் இணையம்

துயரத்தின் பிம்பங்கள், ஜான் பெர்ஜெர் 

By John Berger | Translated from English by Tulsi Swarna Lakshmi

வியட்நாமின் செய்திகள் இன்றைய நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளூள் ஒன்றாக இடம் பெறவில்லை. அமெரிக்க விமானப்படை, திட்டமிட்டபடியே, முழு முனைப்புடன் வடக்கில் குண்டு வீசிக்கொண்டிருப்பதாக, ஒரு சிறு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. நேற்று மட்டும் 270 தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த அறிக்கையின் பின்னால் திரட்டப்பட்ட தகவல்கள் பல உள்ளன. நேற்றைய முன் தினம் அமெரிக்க விமானப்படை, இந்த மாதத்தின் மிகவும் படு பயங்கரமான தாக்குதலை துவங்கியிருந்தது. ஒரு மாதத்தில் வீசப்படும் குண்டுகளை கணக்கிட்டுப் பார்த்தால், இதுவரையிலும் மிகவும் அதிகமான குண்டுகள் இந்த மாதம் தான் வீசப்பட்டுள்ளது. இந்தக் குண்டுகள் பலவகைப்பட்டவை. சுமார் எட்டாயிரம் சதுர அடி நிலத்தை, நொடிப்பொழுதில் தரை மட்டமாக்கும் ஏழு டன் கனமுள்ள பெரிய குண்டுகளும் வீசப்பட்டன. இந்தப் பெரிய குண்டுகளுடன் மனித உயிருக்கு எதிரான பலவகைப்பட்ட சிறிய குண்டுகளும் வீசப்படுகின்றன. சதையினை கீறி உடலுனுள் புகுந்து உட்பொதிந்த பின்பு, ஊடு கதிர்களுக்கு புலப்படாத பிளாஸ்டிக் சரடுளான குண்டுகள் ஒரு ரகம். மற்றொன்றின் பெயர் ‘சிலந்தி’ . தொட்டுவிட்டால் தூண்டிகள் போல் செயல்படும் 30 சென்டிமீட்டர் வரை நீண்டுள்ள உணர்வுகொம்புகள் உள்ள சிறிய எறிகுண்டு அது. இவையெல்லாம், பெரிய குண்டுகள் வீசப்பட்ட இடங்களில் பரப்பி வீசப்படுகின்றன… பெரும் குண்டிலிருந்து உயிர் தப்பித்து, எறியும் நெருப்பை அணைக்கவோ அல்லது அடிப்பட்டவர்களை காப்பாற்றவோ அங்கும் இங்கும் ஓடுபவர்களை கொல்ல உருவாக்கப்பட்டவை இவை.

இன்றைய செய்தித்தாள்களில் வியட்நாமில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எதுவும் அச்சடிக்கப்படவில்லை. ஆனால் இன்று வந்த அறிக்கையோடு வெளியிடத் தக்க புகைப்படம் ஒன்று உண்டு. டொனால்ட் மெக்கல்லின் 1968ம் வருடம் ஹ்யூவில் எடுத்த புகைப்படமே அது. கருப்பு ரத்தம் நிக்காது வழியும் அந்த கருப்பு வெள்ளை புகைப்படத்தில், ஒரு வயதானவர் ஒரு குழந்தையை அரவணைத்தப்படி குத்துக்காலிட்டு அமர்ந்திருப்பார்.

Vietnam war victim_Hue_Mc Cullin 1968_2
Vietnam war victim_Hue_Mc Cullin 1968_2
Vietnam war victim_Hue_Mc Cullin 1968_2
புகைப்படம் © டொனால்ட் மெக்கல்லின் | மூலம் இணையம்

சில காலங்களுக்கு முன்பு மிகவும் அதிர்ச்சி தருபவையாக கருதப்பட்ட போர் புகைப்படங்களை பிரசுரிப்பதை, சுமார் ஒரு வருடத்திற்கு முன்பிலிருந்து, சில வெகுஜன பத்திரிகைகள் மிகவும் சகஜமான செயலாக செய்து வருகின்றனர். பெருமான்மையான வாசகர்கள், போரின் அவலங்களை அறிந்திருப்பதோடல்லாமல் உண்மையை அறிய விரும்புகின்றனர், என்பதை செய்திதாள் நிறுவனங்கள் உணர்ந்ததே, இந்த மாற்றத்திற்கான காரணம் என சிலர் விளக்கம் அளிக்கலாம். மாறாக, நாளிதழ்கள் வாசகர்கள் வன்முறையான புகைப்படங்களை கண்டு கண்டு பழகிவிட்டதாக நம்பிக்கை கொண்டு, மேலும் மேலும் பயங்கரமான புகைப்படங்களை பிரசரித்து ‘பரபரப்பு’ ஏற்படுத்த ஒன்றோடொன்று போட்டியிடுகின்றனர் எனலாம்.

முதல் வாதம் நம்ப முடியாத அளவுக்கு சிறந்ததாகும். இரண்டாவது வாதம் வெளிப்படையாக குறை காண்பது போல் உள்ளது. அரிதான சில சமயங்களைத்தவிர, பத்திரிகைகள் போர் புகைப்படங்களை பிரசரிப்பதற்கான காரணம், அவர்கள் ஏற்படுத்த நினைக்கும் தாக்கம் நாம் முன்பு எதிர்பார்த்தது போலல்ல. சண்டே டைம்ஸ் போன்ற பத்திரிகைகள் வியட்நாம் அல்லது வடக்கு ஐயர்லாண்ட் போர் பற்றிய அதி பயங்கரமான புகைப்படங்களை வெளியிடும் அதே சமயத்தில், போரிற்கு காரணமான அரசியல் கொள்கைகளை ஆதரிக்கின்றன. இதனால் தான் போர் புகைப்படங்கள் எந்த விதமான தாக்கத்தினை ஏற்படுத்திக்கின்றன? என்ற கேள்வியை கேட்க வேண்டி வருகிறது.

அரசியல் கோட்பாடு, மரண புள்ளி விபரங்கள் அல்லது செய்தி துணுக்குகள் அளிக்கும் கருத்தியல்களைக் காட்டிலும், உண்மையை, நிஜ வாழ்வில் நடந்த மெய் அனுபவத்தின் அதி பயங்கரத்தை, போர் புகைப்படங்கள் நினைவூட்டுகின்றன, என சிலர் வாதிடுவர். நாம் மறக்கவேண்டும் என முடிவு செய்து அல்லது அறிந்துகொள்ள மறுத்து, நமக்கு நாமே எழுப்பி உள்ள கருப்பு திரையின் மீது, பகிரங்கமாக இந்த புகைப்படங்கள் அச்சடிக்கப்படுகின்றன, என அவர்கள் மார் தட்டிச் சொல்வர். அவர்களைப் பொறுத்தவரை மெக்கலின் நாம் அடைக்க முடியாத ஒரு “கண்ணாக” அருஞ்சேவை புரிகிறார். ஆயினும், அவைகள், நம்மை எதனை காணச் செய்கின்றன???

நிஜத்தில், அந்த புகைப்படங்கள் நம்மை மிகவும் குறுகியதாக்குகிறது. மிகவும் நேரிடையான அடைமொழியோடு கூற வேண்டுமென்றால், அவைகள் நமது கவனத்தை கவர்கிறது. நாம் அதனால் அபகரிக்கப்படுகிறோம். (அதனை கண்டும் காணாதது போல் இருப்பவரை பற்றி நானறிவேன். அவர்களை குறித்து கூறுவதற்கு எனக்கு ஒன்றும் இல்லை). அந்த புகைப்படங்களை நாம் பார்க்கும் போது, அதில் உள்ளவரின் வலி நம்மை முழுவதுமாய் ஆக்கிரமித்து கொள்கிறது. மனக்கசப்பு அல்லது கோபத்தால் நாம் அலைக்கழிக்கப்படுகிறோம். மனக்கசப்பினால், மற்றவரின் வேதனையை, நாமும் சிறிது ஏற்றுக் கொள்கிறோம். இதனால் யாருக்கும் எந்தவித உபயோகமும் இல்லை. கோபம் நம்மை ஏதாவது செய்யத் தூண்டுகிறது. நாம், புகைப்படத்தின் அந்தத் துயரத் தருணத்திலிருந்து இயல்பு வாழ்விற்கு திரும்பி வர முயல்கிறோம். ஆனால், நமது இயல்பு வாழ்வை மீண்டும் தொடங்குவது என்பது, நாம் தற்பொழுது கண்ட காட்சிக்கு நாம் அளிக்கும் சரியான பதிலாக நமக்கே அது தோன்றுவதில்லை.

மெக்கலினின் வழக்கமான புகைப்படங்கள், துயரத்தின் அந்த திடுக்கிடும் தருணத்தை பதிவு செய்யும்…. – ஒரு பேரச்சம், பெரும் காயம், ஒரு மரணம், வேதனையின் அழுகுரல்… நிஜத்தில், துயரத்தின் இந்தத் தருணங்கள், இயல்பு நிலை காலத்திலிருந்து முற்றிலும் தனிப்பட்டு நிற்கின்றன. இத்தகைய தருணங்கள், சாத்தியமான ஒன்று என்ற அறிவும், அதனை முன்னதாக எதிர்ப்பார்ப்பதுமே, ‘காலத்தை’ மற்ற அனுபவங்களிலிருந்து வேறுபடுத்தி முதன்மை நிலையில் நிறுத்துகிறது. துயர அனுபவத்தினால் வேறுபட்டு நிற்கும் அந்த வன்முறையின் தருணத்தை கேமரா பதிவு செய்வதென்பது, துயரத்தின் தருணத்தை மீண்டும் வேறுபடுத்தி அதனை மேலும் வன்முறையான தருணமாக்குகிறது.

துப்பாக்கி மற்றும் கேமரா இரண்டிற்கும் பொதுவான ‘ட்ரிகர்’ என்று வார்த்தை, இவற்றிற்கான தொடர்பு, இயந்திரத்தோடு நின்றுவிடவில்லை. காமெராவினால் பதியப்பட்ட அந்த பிம்பம், அந்த துயர தருணத்தைக்காட்டிலும் அதிபயங்கரமானது. இவ்விரண்டு வன்முறையும் ஒரே முரண்பாட்டை வலுப்படுத்துகின்றன – புகைப்படம் எடுக்கப்பட்ட அந்த தருணதிற்கும் பிற தருணங்களிற்குமான முரண்பாடே அது.

புகைப்படம் எடுக்கப்பட்ட அந்த தருணத்திலிருந்து இயல்பு வாழ்க்கைக்கு நாம் திரும்ப எத்தனிக்கும் அந்த நொடியில், நம்மை அறியாமலேயே இந்த தொடர்பின்மைக்கான பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்கிறோம். இதில் உண்மை என்னவென்றால், புகைப்படம் எடுக்கப்பட்ட அந்த தருணத்திற்கு எந்தவிதமான பதிலும் எதிர்ச்செயலும் போதுமானதல்லதாகவே தோன்றும். புகைப்படம் எடுக்கப்பட்ட அந்த இடத்திலிருப்போர், இறந்துகொண்டிருப்போரின் கையினை பற்றிக் கொண்டிருப்போர், அல்லது, அடிப்பட்ட காயத்தினை துடைத்துக்கொண்டிருப்போர், நாம் அனுபவிப்பது போல் அந்தத் தருணத்தை அனுபவிப்பதில்லை. அவர்களது பதிலும், எதிர் செயலும் முற்றிலும் வேறானதாக இருக்கும். யாருக்கும் அத்தகைய தருணத்தை சீரிய சிந்தனையுடன் நோக்கி புதிய வலுவுடன் வெளிவர முடியாது. மெக்கலினின் சிந்தனை, மிகவும் தீவிரமானது மற்றும் ஆபத்தானது. மிகுந்த கசப்புடன் ஒரு புகைப்படத்தின் கீழ் அவர் எழுதுகிறார், “ஒரு பற்குச்சியை உபயோகிப்பது போலத்தான் நான் காமெராவை உபயோகப்படுத்திகிறேன். அது தன் பணியை செய்கிறது…”

போர் புகைப்படங்களின் முரண்பாடு, இதன் மூலம் அம்பலமாகிறது. அது “அனுசரணையை” ஏற்படுத்துவதற்காக பிரசரிக்கப்படுகிறது என பெரும்பான்மையோரால் கருதப்படுகிறது. அதன் மிகவும் தீவிரமான உதாரணங்கள் – மெக்கலினின் பெரும்பான்மையான புகைப்படங்களில் உள்ளது போல – அதிகப்பட்சமான அனுசரணையை ஏற்படுத்த மிகவும் துயரமான தருணத்தை காண்பிக்கும். அத்தகைய தருணங்கள், புகைப்படம் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும், சாதாரண தருணங்களிலிருந்து தொடர்பற்ற நிலையிலிருக்கும். அவை தாமாகவே தனித்து நிற்கும். ஆனால், இந்த புகைப்படத்தால் தாக்கப்பட்ட ஒரு வாசகன், இந்தத் தொடர்பின்மையை, தன்னுடைய சுய தார்மீகக் குறைபாடாக உணர்வார். இது நடந்த உடனே, தான் அனுபவித்த அதிர்ச்சி கூட சிதறிப்போகும். போரில் நடத்தப்படும் குற்றங்களுக்கு ஈடாக, அவனுடைய சுய தார்மீகக் குறைபாடுகளின் வீரியம் அவனை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கும். இந்த குறைபாட்டு உணர்வினை பழக்கமான ஒன்று என பொருட்படுத்தாமல் சிலர் விட்டு விடுவர் அல்லது அந்த உணர்வை போக்க பிராயசித்தம் செய்ய தீர்மானிப்பர். அதற்கு ஏதுவான உதாரணம் OXFAM, UNICEF போன்ற நிறுவனங்களுக்கு உதவித்தொகை அளிப்பதுவே ஆகும்.

இந்த இரண்டு வகையிலும், அந்தத் தருணத்தை உருவாக்கிய போர், அரசியலல்லாது ஆக்கப்படுகிறது. அந்தப் புகைப்படம், பொதுமையாக, மனித வாழ்வு நிலையின் சான்றாக மாறுகிறது. ஒரே சமயத்தில், எல்லாரையும் அது குற்றப்படுத்துகிறது அல்லது எல்லாரையும் குற்றமற்றவராக்குகிறது. துயரத்தின் தருணத்தை, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் எதிர்படுதல், அதையும் தாண்டிய பெரிய, மிக மிக அவசரமான ஒரு எதிர்படுதலை முகமூடியிட்டு மறைப்பது போலாகும். பெரும்பாலும் காண்பிக்கப்படுகின்ற இந்தப் போர் நேரிடையாகவோ மறைமுகமாகவோ “நம்மை” காரணம் கூறியே நடைபெறுகிறது. ஆனால், நமக்கு காண்பிக்கப்படுவது நம்மை திடுக்கிடச்செய்கிறது… இதன் அடுத்தப்படியானது, நம்முடைய அரசியல் சுசந்திரமின்மையை, நாம் எதிர்கொள்வது ஆகும். தற்பொழுது உள்ள அரசியல் கட்டமைப்பில், நமக்கு சட்டபூர்வமாக “நமது பெயரிலே” நடை பெரும் போரினை ஒழுங்குபடுத்தும் வாய்ப்புகள் இல்லை. இதை உணர்வதும், அது போல் நடப்பதுவுமே இத்தகையை புகைப்படங்களை பிரசரிப்பதற்கு நாம் அளிக்கக்கூடிய சரியான மறுமொழியாகும். ஆயினும், இருமடங்கான வன்முறையாக்கப்பட்ட அந்த புகைப்படத் தருணம், இந்த புரிதலுக்கு எதிர்மறையாக செயல்படுகிறது. அதனால் தான் இவைகள் எந்த விதமான தண்டனைகளும் எதிர் வினைகளும் இல்லாமல் பிரசரிக்கப்படுகின்றன.

5 நவம்பர் 1926 பிறந்த திரு. ஜான் பெர்ஜெர் அவர்கள் மிகவும் பிரசித்தி பெற்ற கலை விமர்சகர், எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆகும். அவரது ‘பார்வையின் பரிமாணங்கள்’ (Ways of seeing’) என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு மிகவும் பாராட்டப்பட்டதோடு அல்லாமல், பல்கலைக்கழக பாடப்புத்தகமாக விளங்குகிறது. இவர் இந்த வருடம் (2017) ஜனவரி மாதம் இரண்டாம் நாளில் இயற்கை எய்தினார்.

Tulsi Swarna Lakshmi

துளசி ஸ்வர்ண லட்சுமி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உமரிக்காட்டில் பிறந்தவர்சென்னையில் உள்ள  சிவ நாடார் கல்லூரியில் எம்.பி.ஏ பயின்றுள்ளார்சமூக வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட இவர் ஆப்ரிக்கா மற்றும் தென்னமெரிக்கா நாடுகளில் பணியாற்றியுள்ளார்சுனாமி மற்றும் தானே புயலின் போது இந்திய மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்ஏகலோகம் புகைப்படக்கலை அறக்கட்டளையின் இணை நிறுவனர் ஆவார்.

Published on June 2, 2017

Share

Home » Portfolio » கட்டுரைகள் » மொழிமாற்றம் » துயரத்தின் பிம்பங்கள்

Related Articles

2021-06-06T17:41:42+05:30

ஒசரக் கூனிச்சி

சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை. கவிதைகள் முத்துராசா குமார். புகைப்படம்அபுல் கலாம் ஆசாத்,

2021-06-05T15:07:30+05:30

கருப்பு நிலமும், மனிதர்களும் | பாலமுருகன்

இந்திய வரைபடத்தில் புதிதாக உதயமான ஒரு மாநிலத்தில் கால் வைக்க போகிறோம் என்றதுமே அதற்கான முன்திட்டமிடல் ஆரம்பமானது. பயணம் தொடங்கியது. ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து நான்கு மணி நேர சாலைப்பயணம். ஜார்கண்ட் என்ற சொல்லுக்கு காடுகளை கொண்ட நிலப்பரப்பு என்பது பொருள். அந்த பெயருக்கு எந்த குறைவும் இல்லாமல் வழி நெடுக அடர்ந்த காடுகளை காண முடிந்தது. தூத்துக்குடி துறைமுகத்தில் நிலக்கரியை கப்பலில் இருந்து இறக்குமதி செய்வதை பார்த்த எனக்கு நிலக்கரி மலையை வெட்டி போடப்பட்டிருந்த சாலையில் பயணித்த போது சிலிர்ப்பாக இருந்தது.

2021-06-04T15:54:51+05:30

செந்தட்டி | புகைப்படமும் கவிதையும்

ஒளியெழுத்து. சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை. புகைப்படம் அபுல் கலாம் ஆசாத். கவிதைகள் முத்துராசா குமார்.

2021-06-04T15:57:19+05:30

தலைப்பற்ற கவிதை | ஒளியெழுத்து

சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை. கவிதைகள் முத்துராசா குமார். புகைப்படம் அபுல் கலாம் ஆசாத்

2021-06-04T15:57:36+05:30

நானொரு உடுக்கையாடி

சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை. புகைப்படம் அபுல் கலாம் ஆசாத். கவிதைகள் முத்துராசா குமார்.

2021-06-04T11:55:06+05:30

நேர்கோட்டின் வளைவுகள்அபுல் கலாம் ஆசாத்தின் சங்ககால புகாரின் சமகாலங்கள்

ஒரு கைதேர்ந்த சிற்பி, சிற்பத்தின் எல்லா பாகங்களையும் வடித்த பின்பு, ஒரு மௌன நிலையில் அதன் கண்களை திறப்பார். அப்பொழுது, அந்த சிற்பம் உயிர் பெரும். அபுலுக்கும், புகைப்படம் எடுக்கப்பட்டவருக்குமிடையே நடக்கும் உரையாடல் தான் அவரது புகைப்படங்களின் உயிரோட்டம். இவை, உலக நாடுகளோடு கலாச்சார வாழ்வியல், வர்த்தக பரிமாற்றங்களில் சிறப்புப்பெற்ற சங்கக்கால புகாரின் சுவடுகளைத் தேடவில்லை. அந்த பரிமாற்றங்கள் விட்டுச்சென்றுள்ள ஒன்றுபட்ட கலாச்சாரம் மற்றும் பன்முக வாழ்வுமுறையின் குறியீடுகளை அடையாளம் காண்கிறது. சாதாரண மனிதர்களின் சரித்திரத்தை புகாரின் ஆண்கள் மூலமாக சொல்லும் காலத்தால் அழியாத இந்தப்படைப்பு, வரும் காலத்தில் புகார், உலக கலாச்சார வரைபடத்தில் இடம்பெற, ஒரு கலைஞன் விட்டுச்செல்லும் விதைகள்.

2021-06-04T12:40:27+05:30

தென்னிந்தியாவைப் படம் பிடித்த முதல் புகைப்படக் கலைஞர்

காலவரிசைப் படி எல்லாவற்றையும் ஆராயும் போது, கேப்டன் லின்னேயஸ் ட்ரைப் தான் தமிழகத்தை முதன்முதலில் புகைப்படம் எடுத்துள்ளார் என்று அறிய முடிகிறது. இந்தியாவிலேயே புகைப்பட ஸ்டுடியோவும், தொழிற்கலைப் பள்ளியும் முதலில் சென்னையில் தான் தொடங்கப்பட்டது. மதராஸ் ராஜதானியின் தலைநகராக இருந்த சென்னையில் மே மாதம் 1850ல் தொழிற்கலைப் பள்ளி அலெக்ஸாண்டர் ஹண்டரினால் தொடங்கப்பட்டது. அப்போது புகைப்படக்கலை முக்கியப் பாடமாகவும் இருந்தது. ஹண்டர் மற்றும் எலியட் ஆகியோர் மாணவர்களுடன் சென்று, தமிழகத்தின் முக்கிய ஊர்கள் அனைத்தையும் புகைப்படங்களாக எடுத்தனர்.

2021-06-04T17:14:47+05:30

துயரத்தின் பிம்பங்கள்

போர் புகைப்படங்களின் முரண்பாடு, இதன் மூலம் அம்பலமாகிறது. அது “அனுசரணையை” ஏற்படுத்துவதற்காக பிரசரிக்கப்படுகிறது என பெரும்பான்மையோரால் கருதப்படுகிறது. அதன் மிகவும் தீவிரமான உதாரணங்கள் – மெக்கலினின் பெரும்பான்மையான புகைப்படங்களில் உள்ளது போல – அதிகப்பட்சமான அனுசரணையை ஏற்படுத்த மிகவும் துயரமான தருணத்தை காண்பிக்கும். அத்தகைய தருணங்கள், புகைப்படம் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும், சாதாரண தருணங்களிலிருந்து தொடர்பற்ற நிலையிலிருக்கும். அவை தாமாகவே தனித்து நிற்கும்.

2021-06-04T13:19:38+05:30

ஹென்ரி கார்தியெ பிரெஸ்ஸோன் – ‘இந்த நூற்றாண்டின் கண்’

பிரெஸ்ஸோன் ஒரு மகத்தானப் புகைப்படக்கலைஞர், அதேவேளையில் அவர் மகத்தான உருவப்படப் புகைப்படக்கலைஞரும் கூட, ஏனெனில் உருவப்படப் புகைப்படக் கலைஞராக இருப்பவர்கள், மகத்தான புகைப்படக்கலைஞர்களாக இருப்பதில்லை. நாற்பதாண்டுகால புகைப்படப் பயணத்தில், ‘பத்திரிக்கைப்படக்கலை’ (Photo Journalism) என்பதை முழு அர்த்தத்துடன் செயல்படுத்திக் காட்டியவர் பிரெஸ்ஸோன். இன்னும் சொல்லப்போனால் அப்பதத்தினை புனர்மாற்றம் செய்து புதுமையாகக் கண்டுபிடித்தவர் என்றே சொல்லலாம்.

2021-06-04T13:24:15+05:30

ஜான் ஐசக் – மரணித்துப் போன வண்ணங்கள், பிறகொரு வண்ணத்துப்பூச்சி

புகைப்படக்கலைஞர் ஜான் ஐசக் பொறுத்த வரையில் புகைப் படங்களைவிட மனித மாண்பே முக்கியம். அவருடைய புகைப்பட அனுபவங்களில், ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களிடையே வேலை செய்யும்போது, ஒரு சிறு தெருவழியாக அவர் சென்று கொண்டிருக்கிறார். செல்லும் வழியில் ஒரு காட்சி, தெரு முனையில் ஓர் இளம்பெண் முழுநிர்வாணமாக, ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தபடி, அதன் தொப்புள் கொடிகூட வெட்டப்படவில்லை, ரத்த வெள்ளத்தில் குழந்தையின் அழுகுரலோடு அக்காட்சி விரிந்து கிடக்கிறது.

2021-06-04T17:07:18+05:30

“கோட் சூட்டும் புகைப்படமும்” – ஜான் பெர்ஜெர்

சூட்டுகள் அவர்களை உருக்குலைய செய்கிறது. அவர்களுக்கு ஏதோ தோற்றக்கோளாறு இருப்பது போல் தோன்றுகிறது. ஒரு பழைய ஃபேஷனாக மீண்டும் மாறும் வரை அபத்தமாகவே தோன்றும். உண்மையில் ஃபேஷனின் பொருளாதார தர்க்க சாஸ்திரம், பழைய ஃபேஷனை அபத்தமாக காண்பிப்பதில் தான் வெற்றி அடைகிறது. ஆனால், இங்கே, நாம் அது போன்ற ஓர் அபத்தத்தை காணவில்லை; மாறாக, இங்கே உடைகளை அதனை அணிந்திருக்கும் உடல்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, உடைகள் அபத்தமல்லாததாகவும் இயல்பற்றதாகவும் தோன்றுகிறது.